விளையாட்டு

கேத்ரின் மயோர்காவை பாலியல் பலாத்காரம் செய்த ரொனால்டோ?

(UTV|COLOMBO)-அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் மயோர்கா என்ற 34 வயது பெண்மணி, கடந்த 2009 ஆம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜெர்மனி பத்திரிகை ஒன்றிற்கு போட்டியளிக்கும் போது புகார் கூறினார்.

பலமுறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக அப்போது தெரிவித்திருந்தார்.

அது மட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வாக்குறுதி அளித்ததாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அது மட்டுமின்றி ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் கேத்ரின் மயோர்கா வெளியிட்டிருந்தார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹோட்டலில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாருக்கு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட முயற்சி மேற்கொள்கிறார் எனவும் ரொனால்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் மோசடி. உண்மைக்கு புறம்பானது. எனது இத்தனை ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இதுபோன்ற புகார்களில் சிக்கவைக்கப்பட்டேன். ஆனால் அவை யாவும் உண்மை இல்லை என்பது காலம் நிரூபித்தது. அதுபோன்றே அமெரிக்க இளம்பெண் எழுப்பியுள்ள குற்றச்சாட்டும் என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்

சானியா மிர்சா சாதிப்பாரா?

ஆசிய கிண்ணம் 2022: இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்