உலகம்

கென்யாவின் 5வது ஜனாதிபதியாக வில்லியம் ரூட்டோ

(UTV | நைரோபி) – ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் திகதி ஜனாதிபதி பதவிக்கான பொதுத் தேர்தல் நடந்தது.

அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றார்.

கென்யாவின் ஜனதிபதியாக இருந்து பதவி விலகும் உஹுரு கென்யாட்டாவின் துணை ஜனாதிபதியாக வில்லியம் ரூட்டோ இருந்தார். இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த கென்யா சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுக்களை கடந்த வாரம் நிராகரித்தது.

இந்நிலையில், வில்லியம் ரூட்டோ இன்று கென்யாவின் 5-வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இன்று நடந்த பதவியேற்பு விழாவில் உஹுரு கென்யாட்டாவும் வில்லியம் ரூட்டோவும் கைகுலுக்கி பேசிக் கொண்டது மக்களிடம் மகிழ்ச்சியை எற்படுத்தியது.

Related posts

உலகில் முதன் முறையாக சீனாவில் மனிதருக்கு பரவிய H10N3 பறவை காய்ச்சல்

ஆஸி. தலைநகரான கென்பேராவில் இருந்து மக்கள் இடம்பெயர்வு

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்