வகைப்படுத்தப்படாத

கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்மீது 5ஆவது தடவையாக அசிட் வீச்சு

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் உத்தரபிரதேத்தைச் சேர்ந்த பெண், 5ஆவது தடவையாவும் அசிட் வீச்சுக்கு உள்ளாகியுள்ளார்.

கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு ஏற்கெனவே 4 தடவைகள் அசிட் வீச்சுக்கு இந்தப் பெண் இலக்காகியிருந்துள்ளார்.

பெண்கள் வீடுதிக்கு வெளியில் நீர்குழாயில் நீரைப் பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் இந்தப் பெண் மீது நேற்று அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது 35 வயதாகும் குறித்த பெண், 2008ஆம் ஆண்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவர், அந்தப் பெண் மீது அசிட் வீச்சு நடத்தியுள்ளனர்.

பின்னர், 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அதே நபர்கள், பெண் மீது அசிட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினமும் பெண் மீது அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் வருடாந்தம் 100க்கும் அதிகமான அசிட் வீச்சு தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதனைவிட அதிகளவு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Army Intelligence Officer arrested over attack on Editor

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு அனைத்தும் தயார்