சூடான செய்திகள் 1வணிகம்

குளமும் – கிராமும் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் குளங்கள் புனரமைப்பு…

(UTV|COLOMBO)-குளமும் – கிராமும் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் 325 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. பசுமை காலநிலை நிதியத்தின் மூலம் இந்த வேலைத்திட்டத்திற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

பழமை வாய்ந்த எல்லங்கா குள கட்டமைப்பின் கீழ் இருந்த இந்த குளம் தற்பொழுது தூர்ந்து போயுள்ளன. இந்த குளக் கட்டமைப்பு முற்றாக மழை நீரை கொண்டு நிரப்பப்படும் என்று குளம் மற்றும் கிராம வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தில் குளங்கள் மாத்திரமன்றி கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்படும். இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணியும் இதற்குட்பட்டதாகும். பசுமை காலநிலை நிதியம் மற்றும் அரசாங்கமும் இதற்காக ஐந்து கோடி அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

நான்கு வருட காலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தில் அனுராதபுரம், வவுனியா, புத்தளம், குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 16 எல்லங்கா கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன் கீழான முதற்கட்டத்தின் கீழ் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 56 குளங்களை புனரமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை

ஏ9 வீதிக்கு தற்காலிக பூட்டு

நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றிபெற அட்டனில் விசேட வழிபாடு