கேளிக்கைசூடான செய்திகள் 1

குறுகிய ஒரு வருடகாலப் பகுதிக்குள் தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 க்காக யூ. டிவியின் மூன்று நிகழ்ச்சிகள் விருதுக்காக பரிந்துறை செய்யப்பட்டுள்ளன

(UTV|COLOMBO)-நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 க்கான பரிந்துரை நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் குறுகிய காலத்தில் இலங்கை தமிழ் தொலைக்காட்சி வரிசையில் வெற்றி நடை போடும் யூ.டிவி யின் மூன்று நிகழ்ச்சிகள் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர் எம்.ஜே. பிஸ்ரின் மொஹமட்டால் தாயரிக்கப்பட்ட ஈத் வித் குட்டீஸ் நிகழ்ச்சி சிறந்த தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சிக்காகவும்,தயாரிப்பாளர் மஹ்சுக் அப்துர்ரஹ்மானால் தயாரிக்கப்பட்ட ரமஸான் கரீம் நிகழ்ச்சி சிறந்த தொலைக்காட்சி கலாசார படைப்பாக்க நிகழ்ச்சிக்காகவூம், தயாரிப்பாளர் எம்.ஜே. பிஸ்ரின் மொஹமட்டால் தாயரிக்கப்பட்ட நானும் ஒரு தொழிலாளி நிகழ்ச்சி சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்காகவூம் விருதுக்கு பரிந்துறை செய்யப்பட்டுள்ளன.

யூ. டிவி யின் குறுகிய கால பயணத்தில் கிடைத்த சிறந்த அடைவாகவே இதனை கருத முடிகின்றது. தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 நிகழ்வூ எதிர்வரும் 21 ஆம் திகதி இடம் பெறவுள்ளது.

 

 

 

 

Related posts

சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு STF…

கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தயார்-முன்னாள் ஜானதிபதி

கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்