உள்நாடு

குருந்தூர்மலை வழக்கு – கைது செய்யப்பட்டவர்களளுக்கு பெப்ரவரி தவணை.

(UTV | கொழும்பு) –

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று நேற்று  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.

B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் நேற்று குறித்த வழக்கு இடம்பெற்ற போது நீதிமன்றிற்கு வருகை தந்த சட்டத்தரணிகள் அனைவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று விவாதங்கள் நடைபெற்று 29 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2024 அன்று வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது, குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த வருடம் 2022.09.21 குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அவ் ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார், பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஜித் அணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்