அரசியல்உள்நாடு

குருநாகல் மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் போட்டி – வேட்புமனு தாக்கல் செய்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

“உள்ளூராட்சி மன்ற தேர்தல்(2025) குருநாகல் மாவட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் செய்தார் ஜீவன் தொண்டமான்!”

வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில், 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை தனது சொந்த சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

மேலும் குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகரசபைக்கு இ.தொ.கா 13 தொகுதிகளில் 24 வேட்பாளர்களை களமிறக்கின்றது. வடமேல் மாகாணத்தில் முதல் முறையாக தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள்,
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் இ.தொ.கா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தி வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார்.

குருநாகல் மாவட்ட செயலகத்தில் தேர்தல் கடைமைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக காரியாலயத்திலேயே மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

இறுதியாக இம்முறை குருநாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தார்.

Related posts

நாளை முதல் பொது போக்குவரத்து சேவை இடம்பெறும் விதம்

போர்க்குற்றங்களுக்கு கோட்டாபவை பொறுப்பு கூறச்செய்வது சாத்தியமற்றது – ஜஸ்மின் சூக்கா

பலஸ்தீன் போர் நிறுத்தத்திற்கு ஐநாவின் வாக்களிப்பு: அமெரிக்கா எதிர்த்து வாக்களிப்பு