சூடான செய்திகள் 1

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க தினம் குறிப்பு

(UTV|COLOMBO) முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ம் திகதி விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பிரதிதலைவர் என்ற பதவியை உருவாக்கி அந்தப் பதவிக்கு நெருங்கிய ஒருவரை நியமித்து சம்பளமாக சுமார் 33 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டமைக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர

மரண தண்டனைக்கு எதிராக 10 மனுக்கள் தாக்கல்