வகைப்படுத்தப்படாத

குமார் குணரத்னத்திற்கு இந்த நாட்டு குடியுரிமை

(UDHAYAM, COLOMBO) – முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டாளர் குமார் குணரத்னத்திற்கு இந்த நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இது குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றதாக அந்த கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் இந்நாட்டினதும் இரட்டை குடியுரிமையை பெற்றிருந்த குமார் குணரத்னத்தின் அவுஸ்திரேலிய குடியுரிமை கடந்த 31 ஆம் திகதி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதற்கு பின்னர் குமார் குணரத்னம் எவ்வித தடையுமன்றி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு கிடைத்துள்ளது.

Related posts

තලවකැලේ නගරයේ වෙළඳසැල් හදිසි පරීක්‍ෂාවකට

இன்று கொழும்பில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கை

இரத்தினபுரியில் அதிக மழை