வகைப்படுத்தப்படாத

குப்பைகளை கொட்ட இடமளிக்க முடியாது ஸ்டெதன் தோட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டம் – [Photos]

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கு ஹட்டன் நகரத்தை அன்மித்த வட்டடவலை பிளான்டேசனுக்குட்பட்ட ஸ்டெதன் தோட்டப்பகுதியில் இனம்காணப்பட்ட பகுதியை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே பியதாச உள்ளிட்ட பலர் 09.06.2017 சென்ற நிலையில் எமது தோட்டத்தில் குப்பைகளை கொட்ட அனுமதிக்க முடியாது என ஸ்டேதன் தோட்ட தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதீயின் ஸ்டெதன் பகுதியிலே 09.06.2017 பிற்பகல் 2.15.முதல் 3 மணிவரை ஆர்பாட்டம் நடைபெற்றது

நீண்ட நாட்களாக ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடமொன்று இல்லாத நிலையில் நகர பகுதிகளின் குப்பைகளை அகற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது  நகரில் பல பகுதிகளிலும் தேங்கிக்கிடக்கும் குப்பைகளினால் சூழல் மாசடைவதுடன் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டூள்ளது இந் நிலையில்

ஸ்டெதன் தோட்ட பகுதியில் இனம்காணப்பட்ட குறித்த பகுதி யை பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச அம்பகமுவ பிரதேச செயலாளர்  ஆர்.பி.டி சுமனசேகர  ஹட்டன் டிக்கோயா நகரசபையின் செயலாளர் எஸ்.பிரியதர்ஷின தோட்ட முகாமையாளர் உட்பட அரச அதிகாரிகள் விஜயமொன்றை மேற்கொண்டு பார்வையிட்டனர்

இந் நிலையிலே தோட்ட தொழிலாளர்களினால் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டர் ஆர்பாட்ட இடத்திற்கு செற்ற ஹட்டன் பொலிஸார் பேச்சுவார்த்தையினூடாக தீர்வுகானவேண்டும் தெரிவித்ததையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டது சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஹட்டன் கொழும்பு வீதி போக்குவரத்தும் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/1-6.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/2-7.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/3-6.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/4-4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/5-6.jpg”]

Related posts

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு அறிக்கை சபையில்..

Gary Oldman to star in David Fincher’s ‘Mank’

හෙට සිට උෂ්ණාධික කාළගුණ තත්ත්වයේ වෙනසක්