சூடான செய்திகள் 1

குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறிகள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவு

(UTVNEWS|COLOMBO) – புத்தளம் – அறுவக்காடு குப்பை மேட்டிற்கு கழிவுகளை ஏற்றிச் சென்ற லொறிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குப்பைகளை ஏற்றிச் செல்லும் லொறிகளின் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் மற்றும் பொலிசார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு குப்பைகளைக் கொண்டு சென்ற டிப்பர்கள் மீது மூன்றாவது தடவையாக தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் எடுத்துள்ள முடிவு

எதிர்வரும் 03ம் திகதி வேலை நிறுத்தம் செய்வது உறுதி

மின்னல் தாக்கி ஐவர் காயம்