உள்நாடுசூடான செய்திகள் 1

குண்டுதாக்குதல் வழக்கிலுள்ள நெளபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக 7,721 குற்றச்சாட்டுகள்!

(UTV | கொழும்பு) –

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்த சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றச்சாட்டுகள் நேற்று (09) மூவரடங்கிய  நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

இவர்களுக்கு எதிராக 7,721 குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அவற்றில் ஒரு குற்றச்சாட்டை பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலதிக குற்றச்சாட்டுகளை வாசிப்பதற்காக சந்தேக நபர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்துண்டிப்பு குறித்த அட்டவணை

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று…

ஜெனீவாவில் இலங்கை குறித்து விவாதம் இன்று!