விளையாட்டு

குசல் மற்றும் நிரோஷனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் இங்கிலாந்தில் பாதுகாப்பற்ற விதத்தில் உலாவும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, இருவரையும் நாட்டுக்கு திருப்பி அழைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள மேற்படி இருவரும் உயிர்குமிழி முறைமையை மீறியமைக்காக இவ்வாறு திருப்பியழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் அணி முகாமையாளரிடம் அறிக்கையொன்றும் கோரப்பட்டுள்ள அதேவேளை, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

5 விக்கட்டுக்கள் மற்றும் 83 ஓட்டங்களை பெற்று இலங்கையை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற ஜயசூரிய! (படங்கள் இணைப்பு)

பங்களாதேஸ் அணிக்கு எதிராக மோதவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிப்பு

ராஜிவ் காந்தி மைதானத்தை சிகிச்சைக்காக வழங்க தயார்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்