விளையாட்டு

குசல் ஜனித் பெரேராவின் அபார ஆட்டத்தில் இலங்கை அணி வென்றது

(UTV|COLOMBO)-சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது.

டேபன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களையும் பெற்று கொண்டது.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்று கொண்டது.

இந்நிலையில் 304 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில், 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

 

 

Related posts

சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை

இன்றைய போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற திமுத் காருணாரத்ன

லயனுக்கும் ரூட்டுக்கும் இடையே மனக்கசப்பா?