கிசு கிசு

குசலின் காரில் மோதி பலியாகிய நபர் பேரூந்து நடத்துனர்

(UTV | பாணந்துறை) – இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் ஓட்டிச் சென்ற அதிசொகுசு மோட்டார் வாகனமானது பாணந்துறை – ஹொரேதுடுவ பகுதியில் நேற்று(05) அதிகாலை மோதியதில் சைக்கிளில் சென்ற நபர் காயமடைந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்ததாக பாணந்துறை பொலிசார் தெரிவித்திருந்தனர்.

விபத்தில் பலியான நபர் பாணந்துறை – கொரகபொல ஞானசேன மாவத்தையில் வசிக்கும் தனியார் பேரூந்தில் நடத்துனராக கடமையாற்றும் நெவில் பீரிஸ் (64) என்பவராவார்.

விபத்து இடம்பெற்று ஒரு மணி நேரத்தில் பொலிசில் சரணடைந்த குசல் மென்டிஸ் இனை பொலிசார் கைது செய்ததாக பாணந்துறை பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இன்று(06) குசல் மென்டிஸ் நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பட்ட பகலில் பத்திரிக்கையாளர்கள் முன்பு லிப் டூ லிப் முத்தம்!

3 மாத கர்ப்பிணி மாட்டை கற்பழித்த காமுகர்கள்?

தொடரும் கொரோனா மரணங்கள்