வகைப்படுத்தப்படாத

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் நேற்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது.

ஏற்கனவே பல்கலைக்கழகத்தினுள் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 16 மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் தடை விதித்திருந்தது.

ஆனாலும் அவர்களையும் பரீட்சைக்கு உள்வாங்கக்கோரி மாணவர்களின் அநேகமானோர் பரீட்சையை பகிஷ்கரித்து இருந்தனர். ஆனாலும் புதிய 13 மாணவர்கள் மற்றும் பரீட்சையை முழுமையாக நிறைவு செய்யாத 4 மாணவர்கள் உட்பட 17 மாணவர்களும் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த மற்ற மாணவர்களால் வகுப்பறை அடித்து நொறுக்கப்பட்டது. டயர்களும் கொளுத்தப்பட்டன.

இந்நிலையிலேயே கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரு கோடி பெறுமதியான ஹேரோயினுடன் நபரொருவர் கைது

Postal strike this evening

இலங்கையில் சர்வதேச 03 பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை : பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான திட்டம்