உள்நாடு

கிறிஸ்மஸ் தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மதுபான விற்பனைக்கு கோரிக்கை

(UTV | கொழும்பு) –  கிறிஸ்மஸ் தினத்தில் சுற்றுலா சபையின் அங்கீகாரம் பெற்ற விருந்தகங்களுக்கு மதுபான விநியோகத்தை மேற்கொள்ளும் அனுமதியை வழங்கவேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சு, நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபான விற்பனையை தடை செய்வதற்கு பதிலாக விநியோக அனுமதியை வழங்குமாறு தமது அமைச்சு நிதியமைச்சிடம் கோரியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிதியமைச்சு அனுமதி வழங்குமானால், தமது திணைக்களம், கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபான விநியோகத்துக்கான அனுமதியை வழங்கும் என்று மதுவரித் திணைக்கள ஆணையாளர் எம்ஜே குணசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் எம்.பி தலதா அத்துகோரள நியமனம்

editor

உயிரிழந்த தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தின் – பிரதான பாதுகாப்பு அதிகாரி!

சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கம்