கேளிக்கை

கிரிக்கெட் பயிற்சியில் ஐஸ்வர்யா படுகாயம்

(UTV|INDIA)-சிவகார்த்திகேயன் தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம், கனா. பாடலாசிரியரும், பாடகரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இதில், கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது தந்தையாக சத்யராஜ், ஜோடியாக தர்ஷன் நடித்துள்ளனர். வரும் 21ம் தேதி ரிலீசாக உள்ள இப்படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:
பெண்கள் கிரிக்கெட் அணியை மையமாக வைத்து இதுவரை படம் வந்தது இல்லை. கிரிக்கெட் மீது தீராத ஆசை கொண்ட கிராமத்துப் பெண், சர்வதேச அளவில் எப்படி முன்னேறுகிறார்? அதற்குமுன் அவளுக்கு ஏற்படும் தடைகள் என்ன என்பதை இப்படம் சொல்கிறது. கிரிக்கெட் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால், கடந்த 6 மாதங்களாக பவுலிங், பேட்டிங் பயிற்சி மேற்கொண்டேன். ஒருநாள் பயிற்சி பெற தவறினாலும் டைரக்டர் கடுமையாக கோபப்படுவார். கிளைமாக்ஸ் படமானபோது, திடீரென்று ஏற்பட்ட விபத்தில் காலிலும், இடுப்பிலும் காயம் ஏற்பட்டது. எனினும், சாதிக்க வேண்டும் என்ற வெறியில் அதைப் பொறுத்துக்கொண்டு நடித்தேன்.

 

 

 

 

 

Related posts

என்றும் நம்பர் 1

அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பீஸ்ட்’?

ஒஸ்கார் பட்டியலில் ‘சூரரைப் போற்று’