சூடான செய்திகள் 1

கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம்

(UTV|COLOMBO) கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சரியான தகவல்களுடன், அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு, பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக குறிப்பிட்டார்.

இது தொடர்பிலான சுற்றுநிரூபம் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அனுப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆட்பதிவுத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இடங்களில் அடையாள அட்டைக்கான நிழற்படங்களை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்யத் தடை

தனது அறிவிப்பை பிற்போட்டுள்ள ரணில் : குழப்பத்தில் அமைச்சர்கள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை