வகைப்படுத்தப்படாத

காஷமீரில் ஊரடங்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – காஷ்மீரில் நிலைகொண்டுள்ள பிரிவினைவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி சப்சர் பட் கொல்லப்பட்டதை அடுத்து காஷமீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி நேற்று இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், சப்சர் பட் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரின் தெற்கு மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதியாக செயற்பட்ட புர்கான் வானி கடந்த வருடம் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பின் புதிய தளபதியாக சப்சர் பட் செயற்பட்டார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் இந்திய பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சப்சர் பட் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

980kg of beedi leaves found at Erambugodella

சிறுமியிடம் டிரம்ப் கேட்ட கேள்வி…

பலத்த காற்றுடன் கூடிய மழை