சூடான செய்திகள் 1

காலை – இரவிலும் குளிரான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், அடுத்த சில நாட்களுக்கு காலை மற்றும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

Related posts

அரச வைத்தியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

கொழும்பில் முதன்முறையாக வீதி கடவைகளுக்கு சூரிய மின்ஒளி கட்டமைப்பு

50 ரூபா பெறுமதியான தண்ணீர் போத்தல் 200 ரூபாவுக்கு விற்பனை…