சூடான செய்திகள் 1

காலி – கொழும்பு பிரதான வீதி பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல்

(UTV|COLOMBO) காலி வீதி, ரத்கம பிரதேசத்தில் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்துக்கு முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக காலி – கொழும்பு பிரதான வீதி ரத்கம பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 23ம் திகதி குறித்த இரண்டு வர்த்தகர்களும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், இருவரினதும் சடலங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியிருந்தார்.

 

 

 

Related posts

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

கைதிகளை உறவினர்கள் பார்வையிட 2 நாட்களுக்கு சந்தர்ப்பம்

ரஞ்சன் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு