வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் மணிக்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் குறிப்பாக மத்திய மலைத் தொடரின் மேற்கு சரிவுகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரையிலான காற்று வீசக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாமென திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Related posts

ஹைலெவல் வீதியில் போக்குவரத்து நெரிசல்

Disney star Cameron Boyce dies at 20

தங்கச் சுரங்கம் சரிந்ததில் 8 பேர் உயிரிழப்பு