வகைப்படுத்தப்படாத

காற்றுடன் கூடிய மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் வடக்கு பகுதியில் மணிக்கு 50 கிலோ மீற்றருக்கு அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் .

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னலினால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

இரும்பு வளைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு

Dr. Shafi granted bail [UPDATE]

வாகனங்களை பரிசோதனை செய்ய புதிய விதிமுறை?