சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்

(UTV|COLOMBO)  புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்று இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேநேரம், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஞ்சன் மீதான வழக்கு ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு

கண்டி-கொழும்பு வரும் ரயில் போக்குவரத்தில் தாமதம்

ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி சம்பவம் தொடர்பில் விசாரணை