சூடான செய்திகள் 1

கார்பன் அறிக்கை இன்று(20) நீதிமன்றுக்கு

(UTV|COLOMBO) மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில், இன்று (20) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

மன்னார் மனித புதை குழியிலிருந்து இதுவரையில் 320 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் தெரிவு செய்யப்பட்ட 06 எழும்புக்கூடுகளின் மாதிரிகள், கார்பன் பரிசோதனைக்காக, அமெரிக்கா புளோரிடாவிலுள்ள ஆய்வகத்துக்கு கடந்த மாதம் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில், 05 மனித எச்சங்களின் கார்பன் அறிக்கையை கடந்த 16ஆம் திகதி சமிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டிருந்த நிலையில், குறித்த கார்பன் பரிசோதனை அறிக்கை, இன்று மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

இன்றும் பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை

காலநிலையில் மாற்றம்

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு