கேளிக்கை

கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – தென்னிந்திய நடிகர் கார்த்திக் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் வசித்து வரும், நடிகர் கார்த்திக்கிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாகவே அடையாறிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நடிகர் கார்த்திக் ஆதரவு தெரிவித்த நிலையில், நேற்று அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, இவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்றில்லையென முடிவு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்ரமின் சாமி2 படம்

100 படங்கள் நடித்த பிறகே திருமணம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி