சூடான செய்திகள் 1

காமினி செனரத் விடுதலை

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் மற்றும் பிரதிவாதிகள் இருவர் சகல குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்ய நிரந்தர நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றம் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீது லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மகிந்த தலைமையில் கலந்துரையாடல்

490 வது பொலிஸ்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு 07 பேர் கொண்ட குழு