சூடான செய்திகள் 1

காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேரின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான வழக்கை மூவர் அடங்கிய நீதாய நீதிமன்றத்தினால் விசாரிக்க முடியாதென தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை நீதாய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதற்கமைய குறித்த வழக்கை தொடர்ந்தும் விசாரிக்க நீதாய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன், பிரதிவாதிகள் தரப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்

பிரதிவாதிகள், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கரித்துள்ளனர்.

இதற்கு முன்னர் குறித்த வழக்கினை விசாரணைக்கு உட்படுத்தியபோது, குறித்த நான்கு பேரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், அந்த வழக்கை மூவர் அடங்கிய நீதாய நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்படுத்த முடியாதென எதிர்ப்பினை வெளியிட்டனர்.

அந்த எதிர்ப்பிற்கான உத்தரவையே இன்று மூவர் அடங்கிய நீதாய நீதிமன்றம் வழங்கியது.

லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாய் நிதி, முறையற்றவகையில் கையாளப்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

 

 

Related posts

உலகின் மாபெரும் புத்தகக் கண்காட்சி இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில்

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து