உள்நாடுபிராந்தியம்

காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ நிகழ்வின்போதே இந்த நபர் காணாமல்போயுள்ளார்.

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார்.

மது போதையில் அப்பகுதிக்குச் சென்ற இந்த நபர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி கரைக்கு கொண்டுசென்றதன் பின்னர், மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார்.

பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்களால் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related posts

புற்றுநோய் ‘பருப்பு’ம் சந்தையில்

இலங்கை – சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை இன்றும்

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு