கேளிக்கை

காதலில் வீழ்ந்த சுருதி

(UTV | இந்தியா) – கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுருதிஹாசன். சமீபத்தில் இவர் நடித்த ‘புத்தம் புது காலை’ என்கிற ஆந்தாலஜி படம் வெளியானது. தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாய் பிரண்ட் இருக்கிறாரா? என கேள்வி கேட்டார். அதற்கு ஆமாம் என பதிலளித்த சுருதி, இந்த ஆண்டு திருமணமா? என்ற மற்றொரு ரசிகரின் கேள்விக்கு, இல்லை என பதிலளித்தார். மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்ப, நான் எப்போதுமே காதலில் தான் இருக்கிறேன் என கூறினார் சுருதிஹாசன்.

 

Related posts

ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகர்

பிரபல பாடகி காலமானார்

“பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன்..”