கிசு கிசு

காதலில் விழுந்த கிரிக்கெட் வீரர் பும்ரா?

இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் மலையாள நடிகை அனுபமாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை அனுபமா, மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். சுருட்டை முடி, கவர்ச்சியான சிரிப்பின் மூலமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார்.

தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கா விட்டாலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் அனுபமா நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களது காதல் கிசுகிசுக்க அவர்களின் டுவிட்டர் பக்கம் தான் காரணமாக அமைந்துள்ளது. பும்ரா டுவிட்டரில் 25 பேரை ‘பாலோ’ செய்கிறார். இதில் அதிகம் பேர் கிரிக்கெட் வீரர்கள். மற்றவை கிரிக்கெட் தொடர்புடைய பக்கம். அவர் பாலோ செய்யும் ஒரே ஒரு நடிகை அனுபமா தான்.

அதேபோல அனுபமாவும் தனது டுவிட்டரில் பும்ராவை ‘பாலோ’ செய்கிறார். பும்ரா போடும் ஒவ்வொரு பதிவுக்கும் லைக் செய்து அதை ‘ஷேர்’ செய்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக இணையதளத்தில் நெட்டிசன்கள் தகவல் பரப்பி வருகின்றனர்.

Related posts

எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை

சாயிஷாவுக்கும் ஆர்யாவுக்கும் விரைவில் திருமணமா?

வாக்குப் பிச்சையில் இலங்கை