உள்நாடுபிராந்தியம்

காதலியை கத்தியால் குத்திக் கொன்ற காதலன் கைது – புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் பகுதியில் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார்.

வென்னப்புவ, பாடசாலை ஒன்றுக்கு அருகில் வசித்து வந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயது சந்தேக நபருடன் சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் உறவில் இருந்துள்ளார்.

எனினும் காதலை முறித்து உறவை முடிவுக்கு கொண்டு வருவதாக காதலி தெரிவித்தமையினால் ஆத்திரமடைந்த இளைஞன் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காதலியின் வீட்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்தில் காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

நேற்று மாலை சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு கொடுத்த மக்கள் இப்போது வாழப் போராடுகின்றனர் – சஜித் பிரேமதாச

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

இருபது – இதுவரை 39 மனுக்கள் தாக்கல் [UPDATE]