கிசு கிசு

காதலர்களுக்கு காவலாக பொலிஸார்?

(UTV|INDIA) உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் காதலர்கள் குவிந்துள்ளனர். பிரையன் பூங்கா, தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கு ஜோடி ஜோடியாக காதலர்கள் படையெடுத்துள்ளனர். அதே போல கொடைக்கானலில் ரோஜா மலர்களின் விற்பனை அமோகமாக உள்ளதாக பூ வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குன்னூரில் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் காதலர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். காதலர் தின கொண்டாட்டங்களின் போது காதலர்களுக்கு எதிர்ப்பு எழுந்து அவர்களுக்கு பிரச்சனை நேராமல் தவிர்க்க சுற்றுலா தலங்களில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காதலர் தினத்தையொட்டி உதகையில் மலர் கொத்துகள் மற்றும் ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

மலர் கொத்துகள் விலை ஆயிரம் ரூபாய் வரையிலும், தனி ரோஜா பூக்களின் விலை 50 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். காதலர் தினத்தை கொண்டாட உதகையில் ஏராளமானோர் குவிந்ததால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காதல் ஜோடிகளை இடையூறு செய்ய சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து சாதாரண உடைகளில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

Related posts

விடாமல் துரத்திய ரசிகரை கட்டித்தழுவி நெகிழ வைத்த தோனி (VIDEO)

இளவரசர் ஹரி அணிந்திருக்கும் மோதிரத்திற்கு இத்தனை ரகசியங்களா?

அரச குடும்ப அந்தஸ்தை அன்புக்காக துறந்த ஜப்பான் இளவரசி