உள்நாடு

காதலனுடன் சென்று காணாமற்போன யுவதி – கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.

(UTV | கொழும்பு) –

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 25 வயதான நடேஷ்குமார் வினோதினி என்ற பெண்ணின் சடலமும் அவரது கைப்பையும் நேற்று (5) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

காதலனுடன் வீட்டிலிருந்து சென்ற நிலையில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நடேஸ்குமார் வினோதினி தொடர்பான முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான கிணற்றை மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி எச்.எம் தஸ்னீம் பௌசான், திடீர் மரணவிசாரணை அதிகாரி உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று (05) தோண்டியபோதே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பெண்ணின் கைப்பை மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவற்றையும் குறித்த கிணற்றிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

பின்னர் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெலிசர விசேட பொருளாதார நிலையத்திற்கு பூட்டு

இறுதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4,945 முறைப்பாடுகள் பதிவு.

editor