வகைப்படுத்தப்படாத

காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள்

(UDHAYAM, COLOMBO) – காணாமல் போனோருக்கு நீதிகோரி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் சுழற்சி முறையில் முன்னெக்கும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதி மக்கள் ஆரம்பித்துள்ள நில மீட்பு போராட்டம் இன்று 7 வது நாளாகவும் தொடர்கிறது.

128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே பொதுமக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 16 வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது.

Related posts

President appoints new SLFP Organisers

யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பஸ்சேவை