சூடான செய்திகள் 1

காசல்ரீ நீர் தேக்கத்தில் 1 லட்சம் கிராப் மீன் குஞ்சிகள் விடப்பட்டது

(UTV|COLOMBO)-நன்நீர் மீன் வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்கும் வகையில் காசல்ரீ நீர்தேக்கத்தில் ஒரு லட்சம் கிராப்  மீன் குச்சுகள் விடப்பட்டுள்ளது.
காசல்ரீ நன் நீர் மீன் பிடி தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கினங்க  நுவரெலியா நன்நீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காசல்ரீ நீர்தேக்கத்தில் பாதுகாப்பு  கூடுகள் அமைத்து விடப்பட்ட மேற்படி மீன் குஞ்சுகள் ஒரு மாத கால வளர்ச்சியின் பின்னர் நீர் தேக்கத்தில் விடப்படுவதுடன் வருடத்தில் 20 மடங்கு இனபெருக்கத்தை கொண்டதாகவும் 6 மாத காலத்தில் 2 கிலோ கிராம் வரை வளர்ச்சியடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்  மேலும் 45 மீனவ குடும்பங்கள் தமது வாழ்வாதரத்தை கொண்டு நடத்தும் மீன் பிடி தொழிற்துறையை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்”

என் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் – ரிஷாத் தெரிவிப்பு

எதிர்வரும் 26 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்