உள்நாடு

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீர்வெட்டு

(UTV |கொழும்பு) – களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று(12) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை-கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக, மு.ப 8.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணிவரை நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, நீர் வழங்கல் சபையின் களுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் வாத்துவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, மொரன்துடுவ, கட்டுக்குருந்த, நாகொட, தொடங்கொட, பிலமினாவத்த, தர்ஹா நகர், பெந்தொட்ட ஆகிய பகுதிகளுக்கே, நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் 187வது கொரோனா மரணம் பதிவு

“ முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுற பிரார்த்திப்போம்” றிஷாட் பதியுதீனின் பெருநாள் வாழ்த்து

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு