சூடான செய்திகள் 1

கல்வி சார் சமூகம் வளர்ச்சியடைவதன் மூலமே பிரதேசம் எழுச்சி பெறுகின்றது – அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

(UTV|COLOMBO) விமானப்படையினர் கட்டுப்பாட்டிலிருந்து 2016ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட இறம்பைக்குள மகளீர் பாடசாலை மைதான புனரமைப்பிற்கு 20 இலட்சம் ரூபா வழங்குவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் நேற்று பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

ஒரு சமுதாயம் அல்லது ஒரு பிரதேசம் எழுச்சி பெறுகின்றது என்றால் அந்த பிரதேசத்திலே கல்விசார் சமூகம் உயர்ச்சி, வளர்ச்சி அடைகின்றபோது தான் அவ்வாறான வளர்ச்சி காண முடியும் கல்வியோடு சேர்ந்ததாக விளையாட்டுத்துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

ஒரு மனிதனுடைய பண்புகளை, மனிதனுடைய ஒழுக்கத்தை கல்வியோடு மாத்திரமல்லாமல் ஒருவர் உயர்ந்த ஒரு அந்தஸ்தை அடைந்தால் ஒழுக்கம் இல்லை என்றால் அந்தப் பதவிகளால் எந்தப்பயனும் கிடையாது என்பது தான் யதார்த்தம் கல்வியோடு சேர்ந்த ஒழுக்கத்தை உங்களுடைய இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஒழுக்கத்துடன் சேர்த்து கல்வியை வழங்கி வருவதை இங்கு உங்களுடைய சில மணி நேரத்திற்குள்ளே நான் கண்டுகொண்டேன்.

சிறந்த பெறுபேறுகளை இந்தக் கல்லூரி பெற்றுத்தந்திருக்கின்றது. இந்த வவுனியா மண்ணுக்கு மட்டுமல்லாமல் நாடாளாவிய ரீதியிலேயே நல்ல வைத்தியர்களை, நல்ல பொறியியலாளர்களை, சட்டத்தரணிகளை ஆசான்களை இன்னொரன்ன நல்ல சமூதாயத் தலைவிதிகளை இந்த கல்லூரி பல தசாப்தங்களாக உருவாக்கி வந்துள்ளது.

உங்களுடைய அதிபர் என்னுடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக்கு நீண்ட காலமாக மிகவும் நெருக்கமான தொடர்புள்ளவர் அவர் இந்தக்கல்லூரி மீது மிகவும் இரக்கமும், மாணவர்கள் மீது அன்பும் வைத்துக்கொண்டுள்ளார்.

கல்லூரியினுடைய வளர்ச்சியிலேயே மிக அக்கறையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் ஒரு சிறந்த ஒரு நிருவாகி என்பது எனக்குத் தெரியும் அவர் இந்தப் பாடசாலையிலேயே இருந்து சென்று மீண்டும் வந்து உங்களுக்காகப் பணியாற்றுவது அது ஒரு மிகவும் சிறப்பு அம்சமாக நான் பார்க்கின்றேன்.

என்னையும் இங்கு அழைத்து உங்களுடைய தேவைகளையும் என்னிடம் கூறி கடந்த காலங்களிலே வந்து சில அரசியல் வாதிகள் சில விடயங்களை நிறைவேற்றுவதாக சொன்ன விடயங்கள் நிறைவேறவில்லை என்ற விடயங்கள் எங்களுக்கு அவருடைய பாணியிலேயே அழகாக எடுத்துச் சொல்லி இன்னும் இந்த மைதானத்திற்கு அழைத்து வந்து மைதானத்தினுடைய நீண்ட எதிர்கால திட்டங்களையும் சொல்லி அதற்கு எந்த வழியிலே உதவ முடியுமோ உதவுங்கள் என்றும் எங்களிடத்தில் கேட்டிருக்கின்றார்.

இந்தக்கல்லூரி அதிகமான நல்ல ஒழுக்கமுடைய மாணவச் செல்வங்கள் இருக்கின்றீர்கள்.

இந்தக்கல்லூரியினுடைய மகிமையை நீங்கள் ஒவ்வொருவரும் நாளை இந்தக்கல்லூரியை விட்டு வெளியேறுகின்ற போது உயர்ந்த அந்தஸ்தோடும் உயர்ந்த பெறுபேறுகளுடன் எதிர்காலத்திலே நல்ல மனிதர்களாக ஒழுக்க சீடர்களாக சிறந்த வைத்தியர்களாக பொறியியலாளர்களாவோ? அல்லது வேறு துறையைச் சார்ந்தவர்களாகவோ? செல்லுகின்ற பொழுது இந்தக்கல்லூரியிடைய மகிமையையும் இந்தப் பெயரையும் காப்பாற்றுகின்ற மாணவச் செல்வங்களாக நீங்கள் உங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.

இங்குள்ள அத்தியாவசியத்தேவைகள் கல்வி அமைச்சுடன் சேர்ந்து எதுவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் நிச்சயமாக நாங்கள் அதிபருடனும் உங்களுடைய குழுவினருடனும் பேசி நாங்கள் செய்ய முயற்சிப்போம் அதுபோல அவசரமாக இந்த மைதானத்திற்கான மண் நிரப்ப வேண்டும் என்று அதிபரும் அபிவிருத்திக்குழு செயலாளரும் சொன்னார்கள் 35 இலட்சம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சொன்னார்கள்.

உடனடியாக ஒரு 20 இலட்சம் ரூபாவை நாங்கள் மண் நிரப்பி செப்பனிடும் வேலைக்காக ஒதுக்கீடு செய்வதற்கும் இன்னும் தேவையான வசதிகளை எதிர்காலத்திலே இந்த விளையாட்டு மைதானத்திற்காகவும் அதேபோல பாடசாலைக்காகவும் எங்களால் முடிந்ததை செய்வோம் இந்தக்கல்லூரி எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று இறைவனிடத்தில் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

மேலும் 26 பேர் பூரண குணம்

சீனி உட்பட 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – லங்கா சதொச

ஆசியக் கால்பந்தாட்ட தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடையாது