உள்நாடு

‘கல்யாணி பொன் நுழைவு’ இன்று முதல் மக்கள் பாவனைக்கு..

(UTV | கொழும்பு) – ‘கல்யாணி பொன் நுழைவு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள, இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (25) மதியம் 3 மணி முதல் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த அதிநவீன களனி பாலம் நேற்று (24) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது.

நேற்று திறந்து வைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று பிற்பகல் 3 மணி முதல் பொதுமக்களின் பாவனைக்காக இவ்வாறு திறக்கப்படவுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பாலத்துக்கான அணுகல் தடைப்பட்டுள்ளதால் இன்று காலை வந்த பெரும்பாலான மக்களுக்கு பாலத்தைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை.

இன்று காலை பலரும் புதிய பாலத்தைப் பயன்படுத்த முற்பட்டதால் பேலியகொட பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

எவ்வாறாயினும் இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் குறித்த பாலத்தைப் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஆறு வழிப்பாதை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இந்திய மீனவர்களே இலங்கை எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள் – மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம்

editor

ஜனாதிபதி அநுர தலைமையில் இன்று கலந்துரையாடல்

editor