உள்நாடு

கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையில் அன்னதான மண்டபம் திறப்பு

ஜனாதிபதி செயலகத்தின் விசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் அன்னதான மண்டப திறப்பு விழா சனிக்கிழமை (28) கல்முனை பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.பி.எம் சாஹீர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்தன தேரர்,மணிக்கமடு ரஜமகா விகாராதிபதி சிலரத்தன தேரர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.விஜிகரன்,கே.எல் சபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 5 மில்லியன் ரூபாய் நிதியில் இவ் அன்னதான கட்டிடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

-பாறுக் ஷிஹான்

Related posts

ரஞ்சன் கைது [VIDEO]

முன்னாள் எம்பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டினை பயன்படுத்த முடியாது – குஷானி ரோஹனதீர

editor

இனி வீட்டிலேயே பிரவசம்