கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸவுடன் கல்முனையைச் சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் ஏ எம் நஸீர் ஹாஜி முக்கிய சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டார் .
இச் சந்திப்பு வியாழக்கிழமை(6) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனையில் ஊறிப்போயுள்ள இனவாதம், பிரதேசவாதம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலக விடயமாக கலந்து பேசிய பின் அதுவிடயமாக ஒரு அறிக்கையையும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவிடம் நஸீர் ஹாஜி சமர்ப்பித்துள்ளார் .
மேலும் கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினை என்பது ஹலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் தேர்தல்கால உண்டியல்.
அதை பிச்சைக்காரன் புண்ணாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
முன்பு பாராளுமன்றில் கோடீஸ்வரன் எம்.பி ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச.எம்.எம். ஹரீஸ், ஆகியோர் இரு கை ஓசையாக மக்களை உசுப்பேத்தினார்கள. தற்போது பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மட்டும் ஒரு கையால் ஓசையின்றி கோசமிடுகின்றார். ஆதலால் அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறும் இதன்போது பிரதி அமைச்சரை கேட்டுக் கொண்டார்.
இவரது இந்தக் கோரிக்கை பிரதி அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக சமூக ஆர்வலர் கல்முனை சேர்ந்த ஏ எம் நசீர் ஹாஜி தெரிவித்துள்ளார்.
-பாறுக் ஷிஹான்