உள்நாடு

கலைக்கப்பட்ட இடைக்கால குழு!

(UTV | கொழும்பு) –

இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்திற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுக்களை கலைக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க கராத்தே டோ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக நடத்துவதற்கு இடைக்கால குழுவை நியமித்தார். இது தொடர்பான இடைநிறுத்தத்தை ஏற்படுத்திய வர்த்தமானியை தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் இரத்துச் செய்து, கராத்தே டோ சம்மேளனத்தின் விடயங்கள் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் ரொஷான் ரணசிங்க கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி இடைக்கால குழுவொன்றை நியமித்திருந்தார். தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் இரத்துச் செய்து சங்கத்தின் செயற்பாடுகளை முன்னைய அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 36 மணியாளத்தில் கொரோனா தொற்றாளர் இல்லை

பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு

கந்துருகஸ்ஹார சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவத்தில் மூவர் பணி நீக்கம்