உலகம்

கலிபோனியாவில் அவசர நிலை பிரகடனம்

(UTV|அமெரிக்கா) – கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலாவது கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர் கலிபோனியாவில் உயிரிழந்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 3012 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் இதுவரை 92000 பேர் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

துப்பாக்கிச் சூடு – ஈரான் மறுப்பு

இராணுவ தொலைக்காட்சி வலையமைப்பு அலைவரிசைகளை நீக்கியது யூடியூப்

கொரோனா வைரஸ் – சுமார் 80,000 பேர் பாதிப்பு