சூடான செய்திகள் 1

கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை எதிர்க்கும் அதிபர்கள் தொடர்பில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டு பாடசாலைக்கு வருகை தருவதற்கு எதிர்க்கும் அதிபர்கள் இருந்தால், அது தொடர்பில் தமது அமைச்சுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி ஆசிரியைககளுக்கு இலகுவான மற்றும் பொருத்தமான ஆடையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் கடந்த வருடத்தில் ஆலோசனை வழங்கியிருந்தார்.

கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட குறித்த ஆடையுடன் பாடசாலைக்கு வருவதற்கு சில அதிபர்கள் தடை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் 1988 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யமுடியும் எனவும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பாராளுமன்றில் தற்போது ஆரம்பித்துள்ள கூட்டம்

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

ஹட்டன் செனன் கே.எம் டிவிசனில் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டம்