வகைப்படுத்தப்படாத

கருணாநிதி உடல்நலக் குறைவுக்கு உள்ளானமை காரணமாக 21 பேர் உயிரிழப்பு

(UTV|INDIA)-தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி, உடல்நலக் குறைவுக்கு உள்ளானமை காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் கட்சித் தொண்டர்கள் 21 பேர் உயிரிழந்துள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்திய ஊடகமொன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

குறித்த 21 பேரின் மரணம் குறித்து தாம் கவலையடைவதாக திராவிட முன்னேற்றக்கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28ஆம் திகதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவரை பார்வையிடுவற்காக அரசியல் மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட மேலும் பலர் காவேரி மருத்துவமனைக்கு செல்வதுடன், ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை சந்தித்தும் நலன் விசாரித்து வருகின்றனர்.

இதேநேரம், கருணாநிதியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் காவேரி மருத்துவமனை வளாகத்தில் இரவு பகலாக தொடர்ந்தும் கூடியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

ராணி பதவியை பாதுகாப்பற்றதாக உணரும் ஜப்பான் பட்டத்து இளவரசி

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் காலமானார்!

மாணவர் ஒருவரை தாக்கிய மேலும் 6 மாணவர்கள் கைது