உள்நாடு

கம்பஹா மாவட்டத்தின் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை (05) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை மாலை 6.00 மணி முதல் புதன்கிழமை காலை 6.00 மணி வரை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகரசபை பகுதிகள், கட்டான மற்றும் மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒரு பகுதிக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

கல்முனை கல்வி வலையம் : அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

நாளை காலை 7 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்

கொள்கை வட்டி வீதம் தொடர்பிலான தீர்மானம்