உள்நாடு

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (08) மாலை 6.45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்த இருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தர மற்றும் யக்கல பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தேங்காய் இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

editor

நெல்லுக்கான விலையை அறிவித்த அரசாங்கம்

editor