உள்நாடு

கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வௌிநாடு செல்ல தடை விதித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் 18 ஆம் திகதி அஜித் நிவாட் கப்ராலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலப்பகுதியில் பொதுமக்களின் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணவர்தன மற்றும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், இந்த முறைப்பாடு தொடர்பில் மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்தனர்.

Related posts

பிரதமர் ஹரிணியை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்த காத்தான்குடி மாணவி பாத்திமா நதா

editor

கடந்த இரண்டு தசாப்தங்களாக, பல நல்ல பணிகளை செய்திருக்கின்றோம் – ரிஷாட்

editor

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு