உலகம்

கப்பலில் பரவியது கொரோனா வைரஸ் : 3,700 பயணிகளின் நிலை கவலைக்கிடம்

(UTV|ஜப்பான்) – ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளில் கனடா, அவுஸ்ரேலியா, ஜப்பான், ஹொங்கொங், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அடங்குகின்றனர்.

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்று 80 வயது முதியவர் ஒருவருக்கே இருந்ததாகவும், தற்போது வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு போதிய மருந்து வசதிகள் இல்லை என கூறப்படுகின்றது. எனினும் ஜப்பான் மருத்துவர்கள் கரையில் இருந்து சென்று அங்கு சிகிச்சை அளித்து திரும்பி வருகிறார்கள்.

இந்த கப்பலை கண்டிப்பாக தங்கள் எல்லைக்குள் விட முடியாது என்று ஜப்பான் கூறிவிட்டது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹொங்கொங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ள கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான டயமன்ட் பிரின்செஸ் என்ற கப்பலல் 3,700 பயணிகளுடன் ஜப்பானியத் துறைமுகமான யோகோகாமாவில் தரித்து வைக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிரியல் பூங்காவில் தீ விபத்து – 30 குரங்குகள் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்து கொண்ட ஜோ பைடன்

புத்தாண்டையொட்டி பட்டாசு – வாண வேடிக்கைகளுக்கு தடை